எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை விமர்சித்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். முதல்வர் விஜய்க்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.காவிரி விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர், சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.தவெக அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் மற்றும் அருண்ராஜ் போன்றோர் உதயநிதியை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். பாஜக மூத்தத் தலைவர் தமிழிசையும் ஒரு பேட்டியில் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை உதயநிதியை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். வைகை ஆற்றை நேற்று தனது அமைப்பினருடன் இணைந்து சுத்தம் செய்த அண்ணாமலை, அதனுடன் உதயநிதி பேசியதை ஒப்பிட்டு, “நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது. பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...— K.Annamalai (@annamalai_k) August 4, 2026 Could there be any pollution worse than this? Annamalai criticizes Udhayanidhi!உதயநிதியின் இழிவான பேச்சு: தவெக அமைச்சர்கள் கடும் கண்டனம்!