சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக அரசு அச்சுறுத்தல் தருவதாக திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுக்குச் செல்வதாகவும், அதனால் தொழில்முனைவோர் பலரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அரசு சார்பில் இந்தத் தொழிலுக்கு ஒத்துழைக்கும் சூழலை வழங்க வேண்டும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், “சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோருக்கு "ஆய்வு" என்ற பெயரில் அச்சுறுத்தல் தரும் த.வெ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம். சட்டப்படி உரிமம் பெற்றுச் செயல்படும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையாளர்களைத் தேவையற்ற ஆய்வுகள் மூலம் முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தீபாவளி நேரத்தில் இத்தகைய கெடுபிடிகள் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், சிவகாசியின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, தொழிலுக்கு ஒத்துழைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். இல்லையெனில், பட்டாசுத் தொழிலாளர்களின் உரிமைக்காக, மாண்புமிகு கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனுமதியோடு ஜனநாயக வழியில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோருக்கு "ஆய்வு" என்ற பெயரில் அச்சுறுத்தல் தரும் த.வெ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.சட்டப்படி உரிமம் பெற்றுச் செயல்படும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையாளர்களைத் தேவையற்ற ஆய்வுகள் மூலம் முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.… pic.twitter.com/OI7oVdvDgJ— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) August 3, 2026 Thangam Thennarasu condemns TVK for intimidation tactics disguised as inspections at firecracker factoriesதவெக, தவெக... என பள்ளி மாணவர்கள் கோஷம்! விடியோவால் மீண்டும் சர்ச்சை!