"நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை, நான் சந்திராதான்" என்று 'அரசன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா பதில் அளித்துள்ளார்.கோவையில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார். அப்போது, ரிப்பன் வெட்டி நகைக் கடையைத் திறந்து வைத்த அவர், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பல்வேறு நவீன மற்றும் பாரம்பரிய ரக நகைகளைப் பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்ட்ரியா பேசியதாவது:"முன்பெல்லாம் அடுக்கடுக்காகப் பாரமான நகைகளை அணிவதுதான் ஃபேஷனாக இருந்தது. ஆனால், இப்போது ட்ரெண்ட் முற்றிலும் மாறி விட்டது. இப்பலாம் அதிக பாரமான நகைகள் யாருக்குமே பிடிப்பது இல்லை.நகைகள் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கணும், அதேசமயத்தில் போடுவதற்கு ரொம்ப லைட்டாக இருக்கணும்னுதான் எல்லாரும் விரும்புகிறார்கள்” என்றார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வட சென்னை' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் 'அரசன்' (வடசென்னை 2) திரைப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "நான் சிம்புவோட அம்மா இல்லை... நான் சந்திராதான்" என நடிகை ஆண்ட்ரியா நகைச்சுவையாகவும் அதிரடியாகவும் பதில் அளித்தார். அரசன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் அம்மா பாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பதாகத் தகவல் பரவிய நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்."I am not Simbu's mother or anything like that; I am Chandhra," actress Andrea replied when asked about the movie Arasan.அரசன் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியைக் கேட்டு மிரண்டுவிட்டேன்: பீட்டர் ஹெய்ன்