சூர்யா - 47 திரைப்படத்தின் பெயர் இதுவா?

Wait 5 sec.

நடிகர் சூர்யா நடித்த அவரது 47-வது திரைப்படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், சூர்யா - 47 ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், வெங்கட் அட்லுரி இயக்கிய விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். இந்த நிலையில், இப்படத்திற்கு ‘சீனு’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான சீனு திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா! A poster for actor Suriya's 47th film has been released to mark his birthday.