ஏகே - 64 பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தயாரிப்பாளர் இவரா?

Wait 5 sec.

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பது உறுதியானது. ஆனால், அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளாக ஏகே - 64 அறிவிக்கப்படாமல் இருந்தது. சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்காததால்தான் ஏகே - 64 குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், ரசிகர்களின் பல மாதக் காத்திருப்புக்குப் பின் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, படத்திற்கு டேர் டெவில் (dare devil) எனப் பெயரிட்டுள்ளதாகவும் நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி இதனைத் தயாரிக்க உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சூர்யா - 47 திரைப்படத்தின் பெயர் இதுவா?