டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!

Wait 5 sec.

மும்பை: ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்து நிலையில் டாலரின் மதிப்பு சரிந்தது. இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், தொடர்ந்து ஆறாவது வர்த்தக நாளாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது, வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிலைபெற்றது.வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வருகை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் ஆகியவை ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு கூடுதலாக அமைந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.15 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, பிறகு நாள் முழுவதும் ரூ. 95.11 முதல் ரூ. 95.34 என்ற நிலையில் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவடைந்தன.மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்ததும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வருகையும், இந்திய ரூபாயின் மீட்சிக்கு வித்திட்டது. இதன் மூலம் கடந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் ரூபாயின் மதிப்பு 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 95.43 ஆக நிறைவடைந்தது.The rupee strengthened against the US currency for the sixth consecutive session on Monday.கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!