இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

Wait 5 sec.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி வரை சென்னை உள்பட் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:''தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!weather update Rain in Chennai and 16 districts until 10 PM