இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Wait 5 sec.

இதயம் முரளி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், இசையமைப்பாளர் தமன் இசையமைத்த பாடல்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது.நடிகர்கள் அதர்வா, ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் தமனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், இதயம் முரளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.The OTT release date for the movie Idhayam Murali has been officially announced.இதயம் முரளி படத்தின் காமெடி ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!