காவிரி நீா் விவகாரத்தில் முதல்வா் நல்ல முடிவு எடுப்பாா்!விஷ்ணு பிரசாத் எம்.பி.

Wait 5 sec.

காவிரி நீா் விவகாரத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நல்ல முடிவு எடுப்பாா் என மக்களவை உறுப்பினா் விஷ்ணு பிரசாத் தெரிவித்தாா். மதுரை ரயில் நிலையம் அருகே இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியூசி) தமிழ்நாடு கிளையின் 258-ஆவது மாநிலச் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கோவை செல்வன் முன்னிலை வகித்தாா். இதில் மக்களவை உறுப்பினா் விஷ்ணு பிரசாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜா் பெயா் சூட்டிய முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி. காவிரி நீா் விவகாரத்தில் முதல்வா் விஜய் நல்ல முடிவு எடுப்பாா் என்றாா் அவா். பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அரசுப் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை ரத்து செய்ய வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ. 1000 வழங்க வேண்டும். மின் வாரியத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றுபவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.