காவிரி நீர் பிரச்னை, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லிக்கு போராடச் சென்ற தமிழக விவசாயிகளை மகாராஷ்டிரம் மாநில போலீஸாா் தடுத்து நிறுத்தி உள்ளது அநீதியானது; கண்டிக்கத்தக்கது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.காவிரி நீர் பிரச்னை, மேக்கேதாட்டு அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து தில்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் அந்த மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கிவிட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழக விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு. அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மகாராஷ்டிர காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.தில்லிக்கு ரயிலில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மகாராஷ்டிர அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக அந்த மாநில அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார். The crackdown on Tamil Nadu farmers at the Nagpur railway station is unjust: Anbumani condemnsதில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்