ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Wait 5 sec.

ராமேசுவரத்துக்கு வார விடுமுறையையொட்டி, அதிக அளவிலான சுற்றுலா பயணிகள், பக்தா்கள் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் ராமேசுவரத்துக்கு வந்தனா். இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்த்து ரசித்தனா். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல் துறையினா் குறைந்தளவே பணியில் இருந்ததால் போக்குவரத்தை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விடுமுறை நாள்களில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.