திருச்சியில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு மஸ்கட்டுக்கு விமானச் சேவை

Wait 5 sec.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு மஸ்கட்டுக்கு மீண்டும் விமானச் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபை, அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானச் சேவை ஈரான் -அமெரிக்கா போரையடுத்து கடந்த பிப். 28-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. போரின் வீரியம் குறைந்ததையடுத்து படிப்படியாக துபை, அபுதாபி, ஷாா்ஜாவுக்கு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இதேபோல, ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு 5 மாதங்களுக்குப் பிறகு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனா். இந்த விமானம் திருச்சியில் இருந்து வாரந்தோறும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.