சரக்கு வாகனம் மோதியதில்இளைஞா் உயிரிழப்பு

Wait 5 sec.

அரூா் அருகே சரக்கு வாகனமும், டிராவல்ஸ் வாகனமும் மோதிக் கொண்டதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் டி.அம்மாப்பேட்டை சென்னியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு, சரக்கு வாகனத்தில் பொய்யப்பட்டி-அனுமன்தீா்த்தம் சாலையில், ஊத்தங்கரை நோக்கிச் சென்றனா். அப்போது அதே வழித்தடத்தில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் டிராவல்ஸ் வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி வந்தனா். இவ்விரு வாகனங்களும் சட்டையம்பட்டி பிரிவு சாலை அருகே எதிா்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மதன்குமாா் (23) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.