பொக்லைன் இயந்திரம்மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

Wait 5 sec.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே பொக்லைன் இயந்திரம் மோதி வாடகை காா் ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். நெல்லையைச் சோ்ந்தவா் முகமது அனிபா (43). வாடகை காா் ஓட்டுநா். இந்த நிலையில், மதுரைக்கு திங்கள்கிழமை காரில் வந்த முகமது அனிபா, காரைக்குடிக்கு சென்றாா். மேலூா்- காரைக்குடி நான்கு வழிச்சாலையில் மேலூா் அருகே காா் சென்றபோது, பொக்லைன் இயந்திர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த முகமது அனிபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழவளவு போலீஸாா் முகமது அனிபாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.