தில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்

Wait 5 sec.

காவிரி நீர் பிரச்னை, மேக்கேதாட்டு விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் ஆநீதியை கண்டித்து தில்லிக்கு போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகளை மகாராஷ்டிரம் மாநில போலீஸாா் நாக்பூரில் தடுத்து நிறுத்தி அவர்களை திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தியது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பு, மேக்கேதாட்டு அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் ஆநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்(ஆக 4) தில்லியில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காக, தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்கத்தினர் தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரம் வழியாக தில்லி சென்றுள்ளனர். அப்போது, மகாராஷ்டிரத்தின் பாதிவழியில் அந்த மாநில போலீசார் தமிழக விவசாயிகளை நாக்பூர் ரயில்நிலையத்தில் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்களா என்ற தகவல் தெரியவில்லை.தில்லிக்கு ரயிலில் சென்ற தமிழக விவசாயிகளை மகாராஷ்டிரம் மாநில போலீஸாா் நாக்பூரில் தடுத்து நிறுத்தி அவர்களை ரயிலில் இருந்து இறக்கிவிட்டு வலுகட்டாயமாக தமிழகத்திற்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தியது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழக விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Tamil Nadu farmers traveling by train to stage a protest in Delhi were stopped in Nagpur...திருவோணம் அருகே எரிவாயு உருளை வெடித்த விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு