பிரதமர் மோடி இந்தியாவை வளர்ச்சிபெறச் செய்துள்ளார் என்றால் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள் என நடிகர்கள் மாதவன், விவேக் ஓபராயிடம் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையின் தலைவர் ராஜ் தாக்கரே, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டு வெளிநாட்டில் வாழும் நடிகர்கள் பற்றி கடுமையாகச் சாடினார். செய்தியாளர்களுடன் நேற்றுப் பேசிய ராஜ் தாக்கரே, ”பிரதமர் மோடி திரைப்படத்தைத் தயாரித்து அதில் மோடியாகவே நடித்த விவேக் ஓபராய் துபாயில் வசித்து வருகிறார். அவர் இந்தியாவிலேயே தங்குவதில்லை. அதேபோல, பிரதமர் மோடி நாட்டிற்கு நல்ல பணிகளைச் செய்துள்ளதாகவும், தொழில்துறையில் இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்துள்ளதாகவும் நடிகர் மாதவன் கூறினார். ஆனால், அவரும் துபாயில் தான் வசிக்கிறார். ராஜ் தாக்கரே பிரதமரின் மீதும் இந்தியாவின் மீதும் நீங்கள் அன்பு கொண்டிருந்தால், நமது பிரதமர் வளர்ச்சிப் பணிகளைச் செய்வதாக நீங்கள் நம்பினால், ஏன் குடும்பத்துடன் துபாயில் வசிக்கிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசுக்கு ஆதரவான திரைப்படங்களில் பணியாற்றும் இந்த நடிகர்கள், பின்னர் துபாய்க்குச் சென்று வாழ்க்கை நடத்துவதாக அவர் தெரிவித்தார். If Modi delivers growth, why do you live abroad? Raj Thackeray asks Madhavan!பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு!