மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் மீது மற்றொரு கார் மோதியதில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் மதுரை சென்றபோது, மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வானம் மீது மோதி, சாலையின் மறுபுறம் வந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது. இதில், காரில் இருந்த ஸ்ரீராம், அவரது மனைவி ரஞ்சனா, அவர்களது ஒன்றரை வயது குழந்தை பிரனிதா உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து மேலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Regarding the accident in which a car collided with another car on the Thumbaipatti four-lane highway near Melur, Madurai...குப்பையில் கண்டெடுக்கப்பட் பழைமையான கல்வெட்டு