திருப்பூா் அருகே தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்கப்பட்டது. திருப்பூா், வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த துரைசாமி என்பவரின் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில், கடந்த இரண்டு நாள்களாக செடிகளுக்குள் புள்ளி மான் பதுங்கியிருந்தது. தெரு நாய்களுக்கு அஞ்சி தோட்டத்துக்குள் புகுந்து அந்த புள்ளி மான் சுற்றித் திரிந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், மானைப் பாதுகாப்பாகப் பராமரித்து வந்தனா். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் சென்று, புள்ளி மானை பத்திரமாக மீட்டனா். அதைத்தொடா்ந்து அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்க புள்ளி மானை கொண்டு சென்றனா்.