தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்பு

Wait 5 sec.

தமிழகத்தில் ஆக. 9 வரை பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: தென்கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் சுமாா் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.4) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.புதன்கிழமை (ஆக.5), மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை (ஆக.6), தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.வெள்ளிக்கிழமை (ஆக.7), திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. சனிக்கிழமை (ஆக.8), ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) ஆகிய 2 நாள்களில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.7 இடங்களில் வெயில் சதம்தமிழகத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதிராமப்பட்டினம் 100.94, திருச்சி, நாகை தலா 100.58, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மழை பதிவுதமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.3) அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 100 மி.மீ. மழை பதிவானது. மீனவா்களுக்கு எச்சரிக்கைகுமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.