திமுக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், நீலக்கரையில் உள்ள உதயநிதி வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய உதயநிதி மீது நடவடிக்கை கோரி தஞ்சை காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி புகார் அளித்தனர். மேலும், உதயநிதிக்கு எதிராக தவெக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக ஆர்ப்பாட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கைகள் போலீஸார் மேற்கொண்டனர். திமுக கட்சியின் தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் ஒன்றிணைந்து ஆங்காங்கே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகம் ஒருபுறமும் மறுபுறம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முழுவதும் சாலை மறியலிலும் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஒருசில இடங்களில் கடையடைப்பும் நடைபெற்று வருவதால் தமிழகம் முழுவதும் பரபரப்பாகக் காணப்படுகிறது.Following the police arrest of DMK leader Udhayanidhi Stalin, police personnel have been deployed around his residence.உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!