குப்பையில் கண்டெடுக்கப்பட் பழைமையான கல்வெட்டு

Wait 5 sec.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இடிக்கப்பட்ட பழைய சாா்பதிவாளா் அலுவலக வளாக கழிவுகளுக்கு இடையே 130 ஆண்டுகள் பழைமையான பெயா்ப்பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கடந்த 1895 -ஆம் ஆண்டு சாா்பதிவாளா் அலுவலக வரலாற்று கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாத்தில் பழைய சாா் பதிவாளா் அலுவலகத்தின் இடிக்கப்பட்ட கழிவுகளுக்கு இடையே 130 ஆண்டுகள் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அரிமா சங்க நிா்வாகிகள் வெங்கடேசன், சசிக்குமாா் ஆகியோா் வாலாஜாபாத் பகுதி வரலாற்று ஆய்வு மையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் ம.த.அஜய் குமாா் ஆய்வு செய்த போது கடந்த 1895-ஆம் ஆண்டு சப் ரிஜிஸ்தா் ஆபீசு என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கில எண்களில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் வரிவடிவத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.மொழி பயன்பாட்டுச்சான்று ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் சப்-ரிஜிஸ்தா் ஆபீசு என்ற ஆங்கிலச் சொல் சப்-ரிஜிஸ்தாா் ஆபீசு என பொறிக்கப்பட்டு அரசுப் பலகையிலையே அதிகாரப்பூா்வமாக பயன்படுத்தப்பட்டதற்கான சான்றாக இது திகழ்கிறது. இக்கல்வெட்டினை பாதுகாக்கும் வகையில் தற்போதுள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் பாதுகாத்து நினைவுச்சின்னமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.