கருப்பு திரைப்படத்திற்காக சூர்யா எடுத்த பெரிய ரிஸ்க்!

Wait 5 sec.

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் கடன் சிக்கலைத் தீர்த்ததைக் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், அமோக வரவேற்பைப் பெற்றது.இதனால், நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யாவுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், இப்படத்தின் 100 நாள் விழாவை விரைவில் கொண்டாட உள்ளனர். இந்த நிலையில், பேட்டியொன்றில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து பேசிய நடிகர் சூர்யா, “கருப்பு திரைப்படம் வெளியாக வேண்டுமென்றால் மிகப்பெரிய தொகையைக் கடனாக அடைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அவ்வளவு தொகையைக் கொடுக்கும் நிலையில் அப்போதும் நானும் இல்லை. அந்த நேரத்தில் என் குடும்பம் அதற்கு ஆதரவாக இருந்தனர். படம் நஷ்டத்தைச் சந்தித்திருந்தால், அந்தக் கடனை அவர்களும் சுமந்திருக்க வேண்டும். அந்தச் சூழலில் ஜோதிகா உறுதுணையாக நின்றார்.” எனக் கூறியுள்ளார். தி ஒன் ரூல் - விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் புதிய பாடல் வெளியீடு!Actor Suriya has spoken about resolving the debt issues related to the movie Karuppu.