சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்

Wait 5 sec.

சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என பொதுமேடையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பார் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆக. 4) விமர்சித்தார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பேரவையில் இருக்கக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் அருண்ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அருண் ராஜ் பேசியதாவது:''சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பொறுத்துக்கொள்ளாது. அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். அதை தவிர்த்து, அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் பெண்களை தவறாகப் பார்க்ககூடாது. பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.டெங்கு, கொசு ஒழிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றின் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது'' எனக் குறிப்பிட்டார். உதயநிதி கைது! வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ மேற்கோள் காட்டிய இம்ரான் பிரதாப்கரி யார்?