யு-17 உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு 13 பதக்கம்

Wait 5 sec.

யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 13 பதக்கங்களை கைப்பற்றியதுடன், அணிகள் பிரிவில் வெண்கலம் வென்றது.உலக மல்யுத்த சம்மேளனம் சாா்பில் யு-17 சாம்பியன்போட்டி அஜா்பைஜான் தலைநகா் பாகுவில் நடைபெற்றது. 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சிதேந்தா் மாலிக் கடந்த 2025-இல் வென்றிருந்த உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்தாா். ரஷியாவின் சொ்ஜி கா்மிரானை கடும் சவாலுக்குபின் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.இதன் மூலம் இரண்டு கேடட் உலக சாம்பியன் பட்டங்களை வென்ற இரண்டாவது இந்திய வீரா் என்ற சிறப்பை பெற்றாா். ஏற்கெனவே ஜாம்பவான் சுஷில் குமாா் கடந்த 1998, 1999-இல் உலக சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தாா்.45 கிலோ பிரிவில் ஹனுமந்த் ராஜேந்திர 7-1 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானின் மஹிதி தாவூத்தை 7-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.92 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்ஷம் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் ஈரானின் முகமது ரேஸாவை வீழ்த்தி வெண்கலம் வென்றாா். எஃப்எஸ் அணிபிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.