சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!

Wait 5 sec.

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூருக்குச் செல்லும் தினசரி விரைவு ரயில் 10 நாட்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பு: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் குறிப்பிட்ட விரைவு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. வரும் 9, 10 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் குருவாயூா் விரைவுரயில் (எண்16127) வழியில் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் 11, 12 ஆகிய தேதிகளில் எழும்பூா் நிலையத்தில் புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் 45 நிமிடங்களும், வரும் 27, 31 ஆகிய தேதிகளில் அந்த விரைவு ரயில் 30 நிமிடங்களும், வரும் 28, 29 ஆகிய தேதிகள் மற்றும் செப். 1, 2 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் வழியில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டு குருவாயூரை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.