தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டதால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. காவேரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காவிரியில் உரிய தண்ணீர் வந்ததால் படித்துறைகளில் மக்கள் பச்சரிசி காதோலை - கருகமணி, பழங்கள் வைத்து காவிரி தாயிக்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர். மேலும் புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு தாலி மாற்றிக் கொண்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாததால் காவேரி உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. காவேரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து அறவே இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.மேலும், ஆற்றின் படித்துறைகளில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக தண்ணீர் விடப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பெருக்கு விழாவை தண்ணீரில் கொண்டாடிய பக்தர்கள் இன்று ஆற்று மணல் பரப்பில் உட்கார்ந்து கொண்டாடி வருகின்றனர்.ஆடிப்பெருக்கு விழாவுக்கு காவிரியில் நீர் வரும் என எதிர்பார்த்து வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.Aadi Perukku festival loses its charm due to lack of water inflowஇன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்