தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை (ஆக. 3) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.அந்த வகையில் நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த வாரமும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ.13,250-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 1,06,000 -க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை தொடா்ந்து ஐந்தாவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.Gold and Silver today price in Chennai (Aug 3) நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!