கேரளம் மலப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழையால் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பல் அருகிலுள்ள பணக்காடு பகுதியில் தொடர் கனமழையால் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த நிலச்சரிவில் நூலிழையில் உயிர் தப்பினர். உயிரிழப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை. நிலச்சரிவினால் நாடுகாணி - பரப்பனங்காடி மாநில நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருகிலுள்ள பாலக்காடு பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.2019ல் இதே பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கெனவே கேரளத்தில் மலப்புரம், வயநாடு பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் பாலக்காடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் சமீபத்திய மழையால் இதுவரை 15 பேர் இறந்துள்ளதாகவும் 7 பேரைக் காணவில்லை எனவும் முதல்வர் வி.டி. சதீசன் தகவல் தெரிவித்துள்ளார். Major Landslide in Malappuram due to heavy rains in keralamதிருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்