முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் திமுக எம்.எல்.ஏ. மாா்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.இனி மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்கவும், நாள்தோறும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாள்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.Conditional bail for DMK MLA Markandeyan!இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்