நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக மோகன் ராஜா அறிவித்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் கதையை மோகன் ராஜாவே எழுதியுள்ளார்.நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள சர்தார் - 2 திரைப்படம் செப். 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து மோகன் ராஜா படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.காஷ்மோரா திரைப்படத்தில் கார்த்தி, நயன்தாரா இந்த நிலையில், நடிகை நயன்தாரா நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் காஷ்மோரா திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின், இப்படத்தில் மீண்டும் இவர்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா - கவின் நடிப்பில் உருவான ஹாய் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுபோக, நடிகர் யஷ் உடன் டாக்ஸிக், சல்மான் கானுடன் புதிய படம் என பிரம்மாண்ட பட்ஜெட் படங்களிலும் நயன்தாரா இணைந்துள்ளார். கருப்பு திரைப்படத்திற்காக சூர்யா எடுத்த பெரிய ரிஸ்க்!Reports indicate that actress Nayanthara will star opposite actor Karthi in his new film.