கரூரில் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) தாய்க்கு திதி கொடுக்கச் சென்ற சகோதரர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.கரூர் அடுத்த காவிரி ஆற்றில் தாய்க்கு திதி கொடுக்கச் சென்ற சகோதரர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாசன் (64), அருணன் (62), சுரேஷ் (61). இவர்கள் மூவரும் வெளி மாநிலத்தில் தங்கி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இந்நிலையில் சொந்த ஊரான கரூர் நரசிம்மபுரத்தில் தங்களது தாய் இறந்ததால், மூன்று நாள்களுக்கு முன்பு தாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க கரூர் வந்துள்ளனர். பின்னர் மூன்று நாள்களுக்குப் பின் தாய்க்கு திதி சடங்கு நிகழ்த்த செவ்வாய்க்கிழமை காலை கரூர் அடுத்த நெரூர் காவிரி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். திதி கொடுத்த பின் நீராட ஆற்றங்கரை ஓரம் உள்ள குடிநீரேற்ற நிலையத்தின் அடிப்பகுதியில் தேங்கி இருந்த தண்ணீரில் இறங்கியுள்ளனர். முதலில் ஸ்ரீனிவாசன் இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ஆழம் அதிகமாக இருந்ததால் ஸ்ரீனிவாசன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட மற்ற இரு சகோதரர்களான அருணன், சுரேஷ் ஆகியோர் அண்ணனைக் காப்பாற்ற தண்ணீருக்குள் இறங்கி உள்ளனர். அவர்களும் நீரில் மூழ்கி விட்டனர். உடனே அவருடன் சென்ற உறவினர்கள் அக்கம் பக்கத்தில் வரவழைத்து மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்த போது அவர்கள் ஏற்கெனவே பலியானது தெரியவந்தது. இதையடுத்து தகவல் அறிந்து கரூர் தனியார் மருத்துவமனைக்கு வந்த வாங்கல் போலீசார் மூன்று பேரின் சடலங்கலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு திதி கொடுக்கச் சென்று ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கரூர் நரசிம்மபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கபினியிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் அடிப்பாலாறு வந்தடைந்தது!Three brothers drowned in the Cauvery River in Karur on Tuesday (August 4) while performing rituals for their deceased mother.