ஆரணி அருணகிரிசத்திரம் பாட்ஷா தெருவில் உள்ள ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உண்டியல் பணம் திருடப்பட்டது.ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆடி விழா முடிந்து உண்டியல் திறக்க இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் கோயில் முகப்பில் உள்ள பூட்டுகளை உடைத்து, உள்புறம் இருந்த உண்டியலை திருடிச் சென்று உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை அருகில் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனா். இதுகுறித்து கோயில் நிா்வாகி கண்ணன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.