நடிகை சாய் பல்லவி நேர்காணல் ஒன்றில் தான் தொடக்கத்தில் ஒப்பனை இல்லாமல் நடிப்பது பயமாக இருந்ததாகவும் பின்னர் நல்ல படங்களினால் அந்த பயம் விலகியதாகவும் கூறியுள்ளார்.பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக மாறியுள்ளார். ராமாயணா படத்தில் சீதையாக நடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ’வி த வுமன்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சாய் பல்லவி பேசியிருப்பதாவது: உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தொடக்கத்தில் ஒப்பனை இல்லாமல் நடிப்பதில் பயமாக இருந்தது. ரசிகர்கள் அசலான கதாபாத்திரத்தில் நடித்ததை ஏற்றுக்கொண்டனர். நானும் உண்மையான சூழ்நிலை, உண்மையான கதாபாத்திரம் கொண்ட கதைகளில் நடிக்க ஆரம்பித்தேன்.உண்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நீங்கள் ஒப்பனை தூரிகைகளால் அலங்கரிக்கப்பட்ட முகத்தை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிணையவும் மாட்டார்கள். நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் இருந்து இடைவெளி இல்லாமல் இருக்க முயற்சிக்கிறேன். நான் கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்கிறேன்; இயக்குநர்களும் அதில் உடன்படுகிறார்கள். உதடுகளுக்கு லிப் கிளோஸ், கண்மை, சில மாய்ஸ்ரைசர்ஸ்களை பயன்படுத்துவேன். இதில் வெளிப்படையாகக் காட்டாது. மாறாக, பவுன்டேஷன் அல்லது கன்சீலரைப் பயன்படுத்தினால் நான் ஏதோ புதிய பெண் போல காட்சியளிப்பேன். எனக்கு அது ஒத்து வருவதில்லை. சிலருக்கு ஒப்பனை செய்வது பிடித்திருக்கும் அவர்கள் செய்துகொள்ளலாம். சில குறிப்பிட்ட கட்டத்தில் மட்டுமே நீங்கள் இருக்க வேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை என்றார். சமீபத்தில் நடிகர் தனுஷின் ஓ.ம் படத்தில் நித்யா ரெட்டி கதாபாத்திரத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். அடுத்ததாக மணி ரத்னம் இயக்கியுள்ள படத்தில் நடித்து வருகிறார்.மகாராஜா - சாச்சனாவுக்கு டாம் ஹாங்க்ஸ் பாராட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது: விஜய் சேதுபதி Sai Pallavi on her no make up choice: 'I was insecure in the beginning'