ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மகாராஜா படத்தையும் சாச்சனாவையும் புகழ்ந்து பேசியதற்கு நடிகர் விஜய் சேதுபதி, “நான் அதிர்ச்சி அடைந்தேன்” எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குப்பைத்தொட்டியையும் அதன் பின் இருக்கும் எமோஷனலாக கதையையும் மையமாக வைத்து படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது.இந்தப் படத்தைப் பாராட்டி பேசிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் க்ளைமேக்ஸ் காட்சியில், “இன்னும் என்னால் அப்பெண்ணின் நடிப்பிலிருந்து வெளியேற முடியவில்லை. என்னவொரு அசாதாரணமான நடிகை! என்னால் இப்படி நடிக்க முடியாது. நானாக இருந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பேன்” எனத் தெரிவித்தார். எம்மி விருது விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி சென்னைக்குத் திரும்பினார். அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசியிருப்பதாவது: எம்மி விருதுக்கு என்னை அழைப்பார்கள் என நினைக்கவில்லை; அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். டாம் ஹாங்க்ஸ் மகாராஜா படத்தைப் பார்த்தார் என்றும் அவர் அதில் சாச்சனாவைப் பாராட்டினார் என்று அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.எங்கள் தோழி கவிதா மகாராஜா உள்பட மூன்று படத்தைப் பரிந்துரைத்துள்ளார். நான் டாம் ஹாங்க்ஸின் ரசிகன். அவர் நமது படத்தைப் பார்த்து, பாராட்டியிருப்பது மிகவும் பெரிய விஷயம் என்றார். கருப்பர் வந்தா அய்யன் வருவார்... சூர்யா வெளியிட்ட மணிகண்டா படத்தின் முதல் பாடல்!Vijay Sethupathi reacts to Tom Hanks' Maharaja praise: 'I was shocked…'