நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் நேற்று தொடங்கிய இந்த மழை பாளையங்கோட்டை, ரெட்டியார் பட்டி, அம்பாசமுத்திரம், சேரன் மகாதேவி, நெல்லை டவுன் சந்திப்பு பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் இருந்ததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. தற்போது மழை தொடர்ந்து நீடித்தால் மட்டும்தான் வரும் காலங்களில் பொது மக்களின் குடிநீர்த் தேவையும் விவசாயத்தின் தேவையும் பூர்த்தி செய்ய முடியும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. Heavy rain in Nellai! Motorists face hardship!