மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படுவதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அணியை வழிநடத்தி வந்த கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த 2024 ஆம் ஆண்டு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், கடந்த மூன்று சீசன்களாக ஹார்திக் பாண்டியா அணியைக் கேப்டனாக வழிநடத்தினார்.ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த மூன்று சீசன்களாக சரியாக செயல்படவில்லை. இதனையடுத்து, மூன்று சீசன்களுக்குப் பிறகு மீண்டும் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சரியாக செயல்படாததையடுத்து அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்க அணி நிர்வாகம் தன்னை அணுகியதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு என்னை அணுகியபோது, உண்மையில் அப்போது அதற்கு நான் தயாராக இல்லை. இந்த மூன்று ஆண்டுகள் இடைவெளியில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டதால், நான் நிறைய விஷயங்கள் குறித்து யோசிக்க வேண்டியிருந்தது.மும்பை அணிக்கு கேப்டனாக என்னுடைய உதவி தேவைப்படுகிறது எனக் கூற மாட்டேன். ஆனால், அணிக்கு தற்போது சரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அந்த வழிகாட்டுதலை நான் கேப்டனாக இருந்துதான் கொடுக்க வேண்டும் என்றால், அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்வேன். இந்த விஷயம் குறித்து யோசித்தபோது, என்னால் என்ன செய்ய முடியும், முடியாது என்பதை புரிந்துகொண்டேன். என்னால் அணியை மீண்டும் கேப்டனாக வழிநடத்த முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்தும் யோசித்தேன். பல விஷயங்களை யோசித்துப் பார்த்த பிறகு, 10 ஆண்டுகளாக மும்பை அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளோம். மீண்டும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு அணியை வழிநடத்த வேண்டும் என நினைத்தேன்.கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது ஏமாற்றமளிக்கவில்லை. நாங்கள் அணியாக நன்றாக விளையாடவில்லை என்பதே ஏமாற்றமளித்தது. வீரர்களின் பொறுப்புகள் சரியாக நிறைவேற்றப்படவில்லை. மற்ற அணிகள் நன்றாக விளையாடுகிறார்கள். மற்ற அணிகள் எங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள். அந்த அழுத்தத்துக்கு நாங்கள் சரியாக பதிலளிக்கவில்லை. ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியும் சிறப்பாக செயல்படத் தவறியது என்றார்.ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. அதன் பின், இதுவரை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்லவில்லை. Rohit Sharma’s statement that the Mumbai Indians team requires proper guidance carries significance.வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் மிகவும் கடினமாக இருக்கும்: முன்னாள் நியூசி. வீரர்