பாஜக தேசிய தலைவரை நேரில் சந்தித்த முகமது ஷமி!

Wait 5 sec.

இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்துள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான முகமது ஷமி அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவரது பயணம் முடிவுக்கு வந்தது. அவர் இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகமது ஷமி, அதன் பின் அணியில் இடம்பெறவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் இடம்பெறவில்லை.இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை முகமது ஷமி நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இந்த சந்திப்பின்போது, முகமது ஷமியுடன் பாஜகவின் சிறுபான்மையினருக்கான தலைவர் குன்வர் பசித் உடனிருந்தார். அண்மையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பாஜகவின் தேசிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.ஐபிஎல் தொடரில் அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த முகமது ஷமி, அரசியலில் களமிறங்கவுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.enior Indian fast bowler Mohammed Shami has met with BJP national leader Nitin Nabin in person.தனியொருவராக போராடிய மிட்செல் மார்ஷின் சதம் வீண்; டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!