நீ சூரியன் நான் தாமரை... பாடல் பாடி திமுகவை விமர்சித்த ராஜ்மோகன்!

Wait 5 sec.

திமுக - பாஜக கூட்டணி வைத்துள்ளதை பாட்டுப் பாடி மறைமுகமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். 'நீ சூரியன் நான் தாமரை... நீ வந்தால் தானே மலருவேன்' என்ற பாடலைப் பாடி திமுக - பாஜக கூட்டணியை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்க வெற்றிக் கூட்டத்தில் திமுகவை விமர்சித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:''எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் ஒரு ரூபாய் கூட வாங்கக்கூடாது என ஊழலை ஒழித்துள்ளோம். எல்லாமே கணினிமயமாக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் கணினி ஊழல் செய்யாது; சாதி பார்க்காது; ஏற்றத்தாழ்வு பார்க்காது. வரலாற்று சிறப்பு மிக்க ஊழல்களை செய்வது திமுக. பள்ளியில் தொடங்கி சுடுகாடு வரைக்கும் ஊழல் செய்துள்ளனர். ஏஐ-யை பயன்படுத்தி வடமாநிலத்தில் ஒரு பெண் அரசு அதிகாரியாகவே ஆகிவிட்டார். ஆனால், ஏஐ-யை பயன்படுத்தி ஒரு ஆட்சி நூதனமாக ஊழல் செய்துள்ளது. ஓவியம் வழியாக கடினமான கணிதப் படிப்பை மாற்றி வருகிறோம். ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவர்களும் சர்வதேச தரத்திலான மாணவர்களாக மாற வேண்டும் என்பதே முதல்வர் விஜய் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டளை எனக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் கொள்கையுடன் இருக்கக் கூடிய ஒரே கட்சி தவெக மட்டும்தான். அடிமட்ட ஊழலை தவெக வேரறுத்துள்ளது என ஓய்வு பெற்ற ஆட்சியர் ஒருவர் கூறியுள்ளார். இதை விட வேரு என்ன சாதனை வேண்டும் எங்களுக்கு. கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், நீங்கள் பகல் கனவு காண்கிறீர்கள். பிள்ளைகள் படிக்கும் படிப்பில் ஊழல் செய்தது திமுக.ஒரு தவறு நடக்கும்போது அந்த தவறை தடுக்க பல முயற்சிகள் செய்வோம். ஆனால், அது தெரிந்து நடக்கும் தவறு. பள்ளிக் கல்வித் துறை ஆரம்பித்து தொகுதி மறுவரையறை வரைக்கும் திமுக என்ன செய்துள்ளது என்பதை நாம் பார்க்கிறோம். 2026 மட்டுமல்ல, இந்த நூற்றாண்டு முழுக்க தளபதி விஜய்யின் ஆட்சி மட்டும்தான். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அகல் விளக்கு பதிப்பகம் பெயரில் பல கோடி ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கியிருக்கிறார்கள். தளபதி வந்தார். ஆட்சி மாறியது; காட்சி மாறியது. அகல் விளக்கை ஊதி அணைத்துவிட்டார். இனி யாரும் ஊழல் செய்ய முடியாது.உங்கள் வீடு, உங்கள் குடும்பம், உங்கள் வாரிசு என்ற காலம் முடிந்துவிட்டது. அந்தக் காலம் எல்லாம் மாறிவிட்டது. அண்ணன் தளபதி விஜய் ஆட்சிதான் இனி எதிர்காலம் எல்லாமே'' எனக் குறிப்பிட்டார். பேசிக்கொண்டிருக்கும்போது ''நீ சூரியன் நான் தாமரை, நீ வந்தால் தானே மலருவேன்...'' என்று அன்பு படத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடினார் அமைச்சர் ராஜ்மோகன். பாஜகவும் திமுகவும் கூட்டணி வைத்து செயல்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இப்பாடலைப் பாடினார். இதனால் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது. தொண்டர்கள் கோரிக்கைக்கு இணங்க மீண்டும் ஒருமுறை அப்பாடலைப் பாடினார் அமைச்சர் ராஜ்மோகன்.பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாYou are the sun, I am the lotus..." Rajmohan critiques the DMK through a song!