மகளிர் இட ஒதுக்கீடுச் சட்டத்திருத்தம் காலத்தின் கட்டாயம்: பிரதமர் நரேந்திர மோடி

Wait 5 sec.

புதுதில்லி: மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்தம் தற்போதைய காலத்தின் தேவை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தேசத்தின் நலன்களே முதன்மையானவை என்றும் கூறினார்.மகளிருக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது எனவும் இந்த முயற்சியில் தானும் பல ஆண்டுகளாகப் பங்கேற்று வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மகளிர் மேம்பாட்டில் என்டிஏ அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.நாடு முழுவதும் மகளிர் மேம்பாட்டிற்கான தங்கள் உறுதிப்பாட்டில் பாஜக-என்டிஏ கூட்டணியும் உறுதியாக இருப்பதாக கூறினார். भारत की प्रगति, नारीशक्ति के सपनों की उड़ान... https://t.co/pSBPebrlEW— Narendra Modi (@narendramodi) November 29, 2026மகளிருக்கு அதிகாரமளித்தல் என்ற உறுதிப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நாட்டின் நலனே முதன்மையானது என்ற மோடி, நாட்டின் நலனை விட சில கட்சிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், அதன் பாதிப்பை மகளிரும் நாடும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.தற்போதைய சூழலில் மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்திருத்தம் மிகவும் அவசியம் என்று வலியுறுத்திய மோடி, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ளவர்களின் கனவுகளை நனவாக்கவும், நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.இதுதொடர்பாக பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் காணொலிப் பதிவை வெளியிட்டு அதில் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். Prime Minister Modi has said that the BJP and NDA remain unwavering in their commitment to empowering women across the country.