காசி தமிழ்ச் சங்கமம் 5.0! சிறப்பு வாய்ந்த 'திருக்குறள் பயில்வோம்' கருப்பொருள்: பிரதமர் மோடி

Wait 5 sec.

காசி தமிழ்ச் சங்கமம் 5.0 விழா சனிக்கிழமை (நவ. 28) தொடங்கப்பட்ட நிலையில், விழாவின் மூலம் இளைஞர்களிடையே திருவள்ளுவப் பெருந்தகையின் சிந்தனைகள் பரவலாகச் சென்றடைய இதுபோன்ற முன்முயற்சிகள் வழிவகுக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.காசி தமிழ்ச் சங்கமம் 5.0 விழா குறித்து பிரதமர் மோடியின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "காசி தமிழ்ச் சங்கமம் 5.0 இன்று தொடங்கியுள்ளதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்!தமிழ்நாட்டிலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் அமரத்துவமிக்க காசி நகரத்திற்கு வருகைதரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.இந்த ஆண்டு சங்கமத்தின் கருப்பொருளான 'திருக்குறள் பயில்வோம்' என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மானிட வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தாழமிக்க வழிகாட்டுதல்களை திருவள்ளுவப் பெருந்தகையின் ஞானம் வழங்குகிறது. 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது அற்புதமானது. திருவள்ளுவப் பெருந்தகையின் சிந்தனைகள், இளைஞர்களிடையே இன்னும் பரவலாகச் சென்றடைய இதுபோன்ற முன்முயற்சிகள் வழிவகுக்கட்டும்.தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, 'காசி தமிழ்ச் சங்கமம்' கலாசார, அறிவுசார் பரிமாற்றங்களுக்கான ஒரு சிறப்புமிக்க தளமாகப் பரிணமித்துள்ளது. அதே வேளையில் 'உன்னத பாரதம்' என்ற ஒருமைப்பாட்டுணர்வும் இந்த சங்கமத்தால் வலிமையடைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது - புகைப்படங்கள்திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபம் ஏற்றப்பட்டது!PM extends warm welcome to participants on the commencement of Kashi Tamil Sangamam 5.0