நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவான மக்கள் காவலன் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மணிகண்டன் அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் ’மக்கள் காவலன்' என்ற படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் இப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லையாம். காவல்துறை சார்ந்த திரைப்படம் என்றாலும் சில அரசியல் கருத்துகள் மற்றும் வசனங்களால் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நவ. 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்கெட் நாவலில் சிறப்பு நடனமாடிய வாமிகா கபி! The trailer release date for the film Makkal Kaavalan starring actor Manikandan, has been announced.