மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க திமுக எம்.பி.க்கள் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை சிறப்புக் கூட்டத்தொடர் நவ. 30 அன்று தொடங்கப்படவுள்ளது. இதில், அரசியலமைப்பு (132-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்களுக்கான திருத்த மசோதா என 3 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க திமுக எம்.பி.க்கள் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள் குழு அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்திக்கின்றனர். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்த பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.DMK MPs meet with Home Minister Amit Shah!இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி