முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தாத பும்ரா; ஆதரவாக பேசிய பந்துவீச்சு பயிற்சியாளர்!

Wait 5 sec.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வீழ்த்தாதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே பேசியுள்ளார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று (நவம்பர் 27) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் பிளண்டெல் 89 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 59 ரன்களும் எடுத்தனர்.இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குர்னூர் பிரார் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வீழ்த்தவில்லை.இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வீழ்த்தாதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதை நான் உணர்கிறேன். இந்திய அணிக்காக பல போட்டிகளை அவர் வென்று கொடுத்துள்ளார். அவருடைய பந்துவீச்சு மிகவும் நன்றாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் வீழ்த்துவார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் பந்துவீசுகிறார். அதன் காரணமாக அவரது பந்துவீச்சு வேகம் மெதுவாக உள்ளது. அணியில் உள்ள இளம் வீரர்களின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இளம் வீரர்கள் அவரிமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றார்.இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்கள் வீசிய ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 49 ரன்கள் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. The Indian team's bowling coach has spoken about Jasprit Bumrah failing to take a wicket in the first innings of the second Test against New Zealand.முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஆச்சரியமளிக்கிறது: முன்னாள் நியூசி. கேப்டன்