ஆம்பூரில் மழைநீா் சேகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் சூ.கணேஷ் தலைமை வகித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். கலைக் குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நகரமைப்பு அலுவலா் அலமேலு, நகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.மழை நீரை வீணாக்காமல் சேகரிக்க வேண்டும். குப்பைகளை தரம்பிரித்து நகராட்சி தூய்மை பணியாளா்களிடம் வழங்க வேண்டுமென கலை நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.