கோதுமை இனிப்பு அப்பம்

Wait 5 sec.

தேவையான பொருள்கள்:கோதுமை மாவு -200 கிராம்வெல்லம்- 250 கிராம்தேங்காய்த் துருவல் - ஒரு மேசைக் கரண்டிஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி சுக்குப் பொடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:வெல்லத்தைப் பொடி செய்து, இளம்சூடான நீரில் கரைத்து வடிகட்ட வேண்டும். கோதுமை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, உப்பு, சுக்குத் தூள் முதலியவற்றை கரைத்து வைத்த வெல்லத்துடன் சேர்த்துக் கரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், அப்பத்துக்காகத் தயார் செய்த கோதுமை மாவை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து, சிறு வட்டமாக ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து ஒருபுறம் வெந்ததும் கண் கரண்டியால் நன்றாக அழுத்தி விட்டு, மறுபுறம் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும். அப்பக் குழி பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து காய்ந்ததும், அந்தக் குழிகளில் கரண்டியால் இந்தக் கோதுமை அப்பம் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.ஆர். ஜெயலெட்சுமி