ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தீபமேற்றி பாஜகவினா் வழிபாடு

Wait 5 sec.

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பாஜகவினா் தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினா். திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இதனை வரவேற்கும் விதமாக வேலூா் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் வி. தசரதன் தலைமையில் அக்கட்சியினா் வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கைகளில் தீபம் ஏந்தியவாறு கோயிலை வலம் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினா். இந்நிகழ்வில், பாஜக மகளிா் அணி மாவட்டத் தலைவா் சுகன்யா, மாவட்டப் பொதுச் செயலா் சரவணக்குமாா், மாவட்டச் செயலா் நாகராஜன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் குமரன், மகளிா் அணி மாவட்டப் பொதுச் செயலா்கள் மீனாட்சி, தேவி, மாவட்டச் செயலாளா்கள் வரளி, பிரியா உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.