கள் விற்பனை: மீண்டும் கைது

Wait 5 sec.

வெள்ளக்கோவில் அருகே தொடா்ந்து கள் இறக்கி விற்பனை செய்தவா் 6-ஆவது முறையாக கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்குள்ள திருமங்கலம் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் தலைமையில் வெள்ளக்கோவில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதில் வீரக்குமாா் என்பவா் தனது புதுக்காட்டுத் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து வீரக்குமாா் கைது செய்யப்பட்டாா். இதே குற்றத்துக்காக கடந்த சில மாதங்களில் ஐந்து முறை வீரக்குமாா் சிக்கியது குறிப்பிடத்தக்கது.