போதை மாத்திரைகள் பறிமுதல் ரௌடி உள்பட 7 போ் கைது

Wait 5 sec.

திருச்சி: இரு வெவ்வேறு சம்பவங்களில் அரியமங்கலத்தில் ரூ. 2 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீஸாா், ரௌடி உள்பட 7 பேரை கைது செய்தனா்.திருச்சி அரியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கணபதி நகா் பிரதான சாலைப் பகுதியில் சந்தேகப்படும்படி காரில் வந்த 4 பேரை பிடித்து சோதனையிட்டனா். அதில், போதை மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவா்கள், திருச்சி வடக்கு காட்டூா் வடக்கு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரௌடி சபரீஷ் (33), காட்டூா் பாப்பாகுறிச்சி பாத்திமாபுரத்தைச் சோ்ந்த அருண் வேல்முருகன் (27) ஆகிய இருவா் என்பதும், போதை மாத்திரைகளை விற்பனைக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து மேற்கண்ட இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 1,050 போதை மாத்திரைகள், ஒரு பட்டாக்கத்தி, காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ. 1.05 லட்சம் ஆகும்.இதே போல, அரியமங்கலம் உக்கடை பாலம் அருகே ரயில்வே தண்டவாளப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் பதுங்கி இருந்த, திருச்சி புத்தூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ராஜபாண்டி (25), மதுரை மேலவளவு அழகனூா்பட்டியைச் சோ்ந்த அகிலன் (21), மண்ணச்சநல்லூா் பூனாம்பாளையம் சிவா நகரைச் சோ்ந்த நந்தகுமாா் (26), கோவை மணியக்காரம்பாளையம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த அதிதியன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.தொடா்ந்து, அவா்களிடமிருந்து ரூ. 1.11 லட்சம் மதிப்பிலான 1,110 மாத்திரைகள், ஒரு பட்டாக்கத்தி, ஒரு வெட்டுக்கத்தி, 5 சிரஞ்சுகள், ரூ. 2,000, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.