2-ஆவது டெஸ்ட்: 243 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து!

Wait 5 sec.

இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 243 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி உள்ளது.முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 357 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.இதனால் முதல் இன்னிங்ஸின் முடிவில் நியூசிலாந்து அணி 110 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். நியூசிலாந்து சார்பில் வொன் கான்வே 51 ரன்களும், நிக்கோல்ஸ் 22 ரன்களும் சேர்க்க ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் எடுத்தார். இதனால் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி, 46 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்தியாவை விட 243 ரன்கள் முன்னிலையில் உள்ளது.இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.முதல் இன்னிங்ஸில், 117 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, துருவ் ஜூரெல் குவித்த 88 ரன்கள் மூலம் சற்று மீண்டது குறிப்பிடத்தக்கது.நியூசி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 246 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!In the ongoing second Test match between India and New Zealand, the New Zealand team holds a lead of 243 runs.