தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள் இன்று (நவ. 29) மு. க. ஸ்டாலினை சந்திக்கவுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஆதரவளிக்கவுள்ளதாக திமுக நேற்று அறிவித்திருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இன்று (நவ. 29) சந்தித்துப் பேசவுள்ளனர்.”இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் நானும் சென்னைக்குச் சென்று, மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும் திமுகவிடமும் கோரிக்கை விடுக்க இருக்கிறோம்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே! நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள் மு. க. ஸ்டாலினை இன்று (நவ. 29) சந்திக்கவுள்ள நிலையில், செல்வப்பெருந்தகையின் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.Selvaperunthagai posts ahead of Congress leaders' scheduled meeting with M. K. Stalin today.தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?